Skip to main content

ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்... எட்டு பேர் பலி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

PERM STATE UNIVERSITY

 

ரஷ்யாவில் அமைந்துள்ள பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க ஜன்னல் வழியாகக் குதிக்க முயன்றபோது சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

 

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறான். கைது செய்யும்போது அந்த மாணவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் முன்னரே தனது தாக்குதல் நடத்தும் நோக்கத்தைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதாக சில உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

 

மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து ஜன்னல் வழியாகக் குதிக்கும் வீடியோவை ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம், இந்த சம்பவத்தில் இந்திய மாணவர்களுக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியத் தூதரகம், "ரஷ்யாவில் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர தாக்குதலினால் அதிர்ச்சியடைந்தோம். உயிரிழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள். உள்ளூர் அதிகாரிகள், இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அனைத்து இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.