மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆயுதம் ஏந்திய படையினரால் கொல்லப்பட்ட தன்னுடைய தாயின் உடலைவிட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்த நடாகாஷியை இரண்டு மாத குட்டியாக விருங்கா வனத்துறையினர் மீட்டு கொண்டு வந்தனர். அன்றைய பொழுதியில் இருந்து 14 வருடங்கள் நடாகாஷியை மேத்யூ ஷவாமு பராமரித்து வந்தார்.
காங்கோ நாட்டில் அமைந்துள்ள விருங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்ததது ஆதரவற்ற கொரில்லாவான நடாகாஷி மற்றும் மடாபிஷி. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, என்பவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும்போதே அவற்றுடன் விதவிதமாக ‘செல்ஃபி’ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மேத்யூ ஷவாமு அந்த கொரில்லாக்களுடன் எடுத்த ‘செல்ஃபி’ படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த படம் உலகம் முழுவதும் வேகமாக வைரலானது. எப்போதும் தன்னுடைய பாதுகாவலருடனே இருக்கும் நடாகாஷி தொடர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கொரில்லா நடாகாஷி, தனது பாதுகாவலர் மேத்யூ ஷவாமு மடியிலேயே உயிரிழந்தது.