Skip to main content

எரிவாயு குழாய் வெடித்து பயங்கர விபத்து... 10 பேர் உயிரை பலி வாங்கிய கொடூரம்... (வீடியோ)

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்த கொடூரம் நைஜீரியா நாட்டில் நடந்துள்ளது.

 

gas pipe line accident in nigeria

 

 

விவசாய நாடான நைஜீரியா, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கையிலெடுத்து கடந்த சில காலங்களாக அதனை செய்து வருகிறது. அந்த வகையில் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பராமரிப்பு பணி நடந்த போது குழாயில் ஏற்பட்ட விபத்து காரணமாக எரிவாயு குழாய் வெடித்து சிதறியது.

அப்போது அங்கிருந்த 10 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கொழுந்து விட்டு எறிந்த தீயினை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு தீயணைப்பு படையினர் திணறினர். தீயானது தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்த கோர விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் விபத்து நடந்த அப்பகுதி நிலப்பரப்பு முழுவதும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிப்பில் இறங்கும் நாடுகள் அதற்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்