Skip to main content

மீண்டும் சூடு பிடிக்கும் ரஃபேல் விவகாரம்: விசாரணை வளையத்தில் ஃபிரான்ஸ் அதிபர்!  

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

narendra modi - emmanuel macron

 

ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

 

இருப்பினும், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரான்ஸின் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வௌியிட்டது. இதனையடுத்து, ரஃபேல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு உற்பத்தி செய்யும் டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கமளித்து.

 

இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் இணைய ஊடகமான மீடியாபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீடியாபார்ட், ஜூன் 14ஆம் தேதியே விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும், ஃபிரெஞ்சு பொது வழக்கு சேவைகளின் நிதிக் குற்றப்பிரிவு இதனை உறுதிசெய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

 

ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது அதிபராக இருந்த பிரான்சுவா ஹாலண்டின், அப்போது பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் ஆகியோரின் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளைப் பற்றியுள்ள கேள்விகளும் விசாரிக்கப்படும் என மீடியாபார்ட் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜி20 உச்சி மாநாடு; சர்வதேச தலைவர்கள் டெல்லி வருகை

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

G20 Summit International leaders visit Delhi

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்நிலையில் நண்பகல் 12.35 மணியளவில் பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரான் டெல்லி வருகிறார். அதேபோல் பிற்பகல் 01.40 மணியளவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி வருகிறார். பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பின்பு முதல் முறையாக டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக ஜோ பைடன் டெல்லி வருகிறார். மேலும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலாவால், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டிலியனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வருகை புரிந்துள்ளனர். டெல்லிக்கு வருகை புரிந்த சர்வதேச தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 


 

Next Story

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வருகை

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

French President Emmanuel Macron visits India

 

ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில்  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் ஜி - 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இமானுவேல் மேக்ரான் மாநாட்டை தொடர்ந்து டெல்லியில் இருந்து வங்கதேச நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக ஜி - 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது 8 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. அதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே போன்று உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதன் காரணமாக ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.