நீங்கள் பிரெஞ்சு ஃப்ரைஸ் (french fries ) பிரியரா. அப்படி இருந்தால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல். பன்னாட்டு உணவகங்களான கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ் போன்றவற்றில் பெருமபாலும் வெளிநாடுகளில் இருந்தான் உருளைக்கிரங்குகள் இறக்குமதி செய்யப்பட்டு பிரெஞ்சு ஃப்ரைஸ் தயாரிக்கப்படுகிறது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால்,இதுவரை வந்திருந்த பிரெஞ்சு ஃப்ரைஸின் அளவைவிட இனி வரும் பிரெஞ்சு ஃப்ரைஸின் அளவு சிறிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு ஃப்ரைஸ் பொறுத்தவரையில் நீளமாக இருக்கும்போதுதான் அதன் ருசி அதிகம். ஆனால் பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் லண்டனில் அதிகமான வறட்சியும் வெயிலும் நிலவுவதால் உருளைக்கிழங்கின் விளைச்சல் குறைந்து உள்ளதாகவும், உருளையின் அளவும் சிறியதாக இருப்பதாகவும், அந்நாட்டு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பெல்ஜியம் நாட்டின் விருப்பமான உணவு வகைகளில் ஒன்றான பிரெஞ்சு ஃப்ரைஸ், அந்த நாட்டில் அதிகமாக பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.