நேபாளம் நாட்டின் தலைநகரில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகே ஷிவ்புரி என்ற பகுதியில் பயணிகள் சேவையளிக்கும் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. 'ஏர் டைநஸ்ட்டி' நிறுவன ஹெலிகாப்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் கொண்ட ஷிவ்புரி பகுதிக்கு சென்றபோது திடீரென இந்த விபத்து நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காத்மாண்டில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த விபத்தில் முதற்கட்டமாக நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த காலங்களில் நேபாளத்தில் விமான விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது பயணிகள் ஹெலிகாப்டர் நொறுங்கி நான்கு பேர் உயிரிழந்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.