Skip to main content

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சண்டை!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

kabul airport

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

 

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் ஆபத்தானது எனவும், பாதுகாப்பு படைகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

 

காபூல் விமான நிலையத்தின் வடக்கு நுழைவு வாயிலில், ஆப்கன் வீரர்களும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, அமெரிக்க மற்றும் ஜெர்மன் இராணுவ வீரர்களும் இணைந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ஆப்கன் வீரர் உயிரிழந்துள்ளார்; மூவர் காயமடைந்துள்ளனர். இந்தத் தகவலை ஜெர்மன் இராணுவம் வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்