![family passed away in china after eating noodles](http://image.nakkheeran.in/cdn/farfuture/x_wcGlJ8JystLoRpBivNfemZnAdJbsp4T5mby-0gV8c/1603259542/sites/default/files/inline-images/fhbfh.jpg)
நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சீனாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங்கில் வசிக்கும் குடும்பம் ஒன்று, கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி, வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து, ஒன்பது பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். புளித்த சோள மாவு கலந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நூடுல்ஸ், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃபிரீசரில் பாதுகாக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இக்குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூடுல்ஸ் விஷமாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.