Skip to main content

" இனி என் ஓட்டு டிரம்புக்கு மட்டும் தான்.." - எலான் மஸ்க் ட்வீட் 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Elon Musk tweets

 

உலகின் பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் வாங்கப் போவதாக அறிவித்தார். பின்னர், ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5 சதவீத கணக்குகள் போலி என்பது தெரிய வந்ததால் அதனை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் அடுத்த அமெரிக்க தேர்தலில் ட்ரம்பை வேட்பாளராக நிறுத்தவுள்ள குடியரசு கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் நிறுவனங்களால் அமெரிக்காவில் தயாரிக்கும் மின்சார கார்களுக்கு தற்போதைய ஜோ பைடன் அரசு வரிச்சலுகை அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எலான் மஸ்க், பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வெறுப்பு அரசியலைக் கையாளும் ஜோ பைடனின் மக்களாட்சி கட்சிக்கு இனி வாக்குச் செலுத்தமாட்டேன். என்னால் இனி அவர்களை ஆதரிக்க முடியாது, குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என தெரிவித்துள்ளார். இந்த  தகவலை அவர் வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட டிவிட்டர் மூலமாகவே தெரிவித்துள்ளார் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்