Skip to main content

ட்விட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

Elon Musk changed the Twitter logo!

 

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 

அந்தவகையில் அண்மையில்,  ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதோடு, சி.இ.ஓ என அச்சிடப்பட்டுள்ள டி-சர்ட்டுடன் அந்த நாய் கண்ணாடி அணிந்து ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, காலங்காலமாக இருந்த ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை மாற்றி விட்டு நாய்க்குட்டியின் புகைப்படத்தை ட்விட்டர் லோகோவாக மாற்றினார். இந்தச் சம்பவமும் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் மீண்டும் ட்விட்டரின் பழைய லோகோவான குருவியை மாற்றினார் எலான் மஸ்க்.

 

மேலும் சரிபார்க்கப்பட்ட பயனர் என்பதை குறிக்க வழங்கப்படும் ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையை எலான் மஸ்க் கொண்டு வந்தார். மேலும் டுவிட்டரில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், அதன்படி சரிபார்க்கப்பட்ட (ப்ளூ டிக்) கணக்குகள் வைத்திருக்கும் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும்.  சரிபார்க்கப்படாத (ப்ளூ டிக் இல்லாதவர்கள்) கணக்குகள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்கும் சரிபார்க்கப்படாத பயனர்கள் இனி நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்  எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை தற்போது கருமை நிறத்தில் ஆங்கில எழுத்தான எக்ஸ் (x) என்ற  வடிவில் லோகோவை மாற்றியுள்ளார். இந்ந லோகோ மாற்றம் தற்போது டுவிட்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சைக்கு பிரெஞ்சு மொழியில் புது விளக்கமளித்த குஷ்பு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

nn

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியதாவது, லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலி கான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

இந்தநிலையில் குஷ்பு, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்பு-வை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை என குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த குஷ்பு, “ஒரு பெண்ணை அவமதிக்கும் விதமாக தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இது தான் திமுக-காரர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைக் காட்ட முடியும். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது. உங்களைப் போன்ற முட்டாள்கள் ஸ்டாலினை சுற்றி இருப்பது அவருக்கு அவமானம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்களை போல இருக்கும் முட்டாள்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என மு.க ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

 

குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்’ என விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

காசா மருத்துவமனைகளுக்கு எலான் மஸ்க் நன்கொடை

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Elon Musk donates to Gaza hospitals

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.

 

இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனிடையே, காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது. மேலும், இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவத்தால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவரும், உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்