Published on 09/02/2021 | Edited on 09/02/2021

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரப் பணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இன்று (09.02.2021) ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் பேசிய தமிழக முதல்வர், இன்னும் 15 நாட்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு பரப்புரையில் முதல்வர் ஈடுபட்டு திரும்பிய நிலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.