
துருக்கி - சிரியாவில் சில தினங்கள் முன் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.