Published on 23/08/2022 | Edited on 23/08/2022

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.