Published on 19/08/2018 | Edited on 19/08/2018
![INDO](http://image.nakkheeran.in/cdn/farfuture/GvR1Icj0xwfeA4dpAb_7IEPGAMjXaFuPOozO9O_wiiw/1534712906/sites/default/files/inline-images/download_23_0.jpg)
இந்தோனோசியவில் லம்போக் தீவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்ட்ர் அளவுகோலில் 6.9 பதிவாகியுள்ளதாக அமெரிக்கா ஆய்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவிலுள்ள லம்போக் மற்றும் பாலி தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் என்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, தெற்கு கலிமண்டன், தென்கிழக்கு மடுரா, கிழக்கு ஜாவா ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. லாம்போக் நகரில் 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே போல் ஜிலி தீவிலும் பாதிப்பு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அங்கு மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ஆனால் சேதம்பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.