Skip to main content

‘தீராத காதல், திகட்டாத அன்பு...’ - மனைவியின் சிறிய ஆசைக்காக ரூ.400 கோடி செலவு செய்த கணவர்

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
Dubai millionaire who bought an island for his wife to bathe in a bikini

கணவர்கள் தன்னுடைய இணையரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நிகழ்வுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் காதல் கணவர்கள் என்றால் கொஞ்சம் ​ஸ்பெஷல்தான். காதலிக்கும் காலத்திலேயே காதலிக்கு பிடித்த விஷயங்களை அறிந்து அதனை நிறைவேற்றி தினந்தினம் அவரை சர்ப்ரைஸ் செய்து கொண்டே இருப்பார்கள். அவரே கணவராகவும் வந்தால், சொல்லவா வேண்டும்... ‘ராஜ ராஜ சோழன் நான்... எனை ஆளும் காதல் தேசம் நீதான்..’என்று வாழ்கையே வண்ணமயமாகத் தோன்றும் அல்லவா... அப்படி துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் வாழ்க்கையை வண்ணமயமாக மேலும் அழகாக்கி கொண்டே செல்கிறார்.

துபாயைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர்  ஜமால் அல் நடாக். இவரது காதல் மனைவி சவுதி அல் நடாக். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த சவுதி அல் நடாக்கிற்கு துபாயில் படிக்கும் போது தொழிலதிபர் ஜமாலின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிமுகம் காலப்போக்கில் காதலாக மாற, இருவரும்  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டனர். காதலிக்கும் காலத்திலேயே மனைவிக்கு காஸ்ட்லி பரிசுகளை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யும் ஜமாலின் காதல், கல்யாணத்திற்கும் பிறகும் நீள்கிறது. மனைவியின் நிறைவேறாத பெரிய ஆசைகளை நிறைவேற்றுவது என்பது வேறு. ஆனால் காதல் மனைவியின் சின்ன சின்ன ஆசைகளைக் கூட பெரிய பெரிய விஷயமாக செய்து சவுதியையே அசர வைத்துவிடுகிறார் ஜமால்.

Dubai millionaire who bought an island for his wife to bathe in a bikini

உதாரணமாக, சவுதிக்கு நீச்சல் உடை என்று சொல்லப்படும் ‘பிகினி’ உடை அணிந்து  நீந்தி மகிழ விருப்பமாம்.  இதில் என்ன இருக்கிறது என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால் காதல் மனைவியின் விருப்பத்தை அறிந்த ஜமால், உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதேசமயம், மனைவி பிகினி உடையில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் குளிக்க வேண்டும் என்று நினைத்த ஜமால்,  ரூ. 419 கோடி கொடுத்து ஆசியாவில் ஒரு தீவையே விலைக்கு வாங்கி சவுதியிடம் கொடுத்து சர்பரைஸ் செய்திருக்கிறார்.

இப்படியான ஜமாலின் தீரா காதலையும் திகட்டாத அன்பையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் சவுதிதான், இந்த விஷயத்தையும் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். உலகம் முழுவதும் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சவுதியின் கமெண்ட் பாக்ஸில் கருத்துகள் நிரம்பி வழிகிறது.

சார்ந்த செய்திகள்