Skip to main content

2007 என்று குறிப்பிட்டால் ட்விட்டர் கணக்கு முடக்கப்படும் - ட்விட்டர் எச்சரிக்கை

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

ட்விட்டர் கணக்கின் புதிய ‘தீம்’ வேண்டுமென்று பிறந்த ஆண்டை மாற்றினால் உங்கள் ட்விட்டர் கணக்கு ஹாக்கர்களால் முடக்கப்பட்டுவிடும் என்று ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Don't change your birth year in twitter account

 

வாடிக்கையாளர்கள் தங்களின் ட்விட்டரின் கலர், வடிவத்தை மாற்றும் வகையில் தீம்-ஐ மாற்ற வேண்டுமென்றால் உங்கள் பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றுங்கள். அப்போது உங்கள் ட்விட்டர் கணக்கு புதிய வடிவத்தில் புதிய தீம் (நிறம்) மாறும் என்ற செய்தி ட்விட்டரில் வைரலாகி பரவி வருகிறது. இதனைப் பார்த்து  பலரும் பிறந்த வருடத்தை 2007 என்று குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு குறிப்பிட்டவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், ''உங்கள் ட்விட்டர் கணக்கின் தீமை மாற்ற பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றுங்கள் என்ற தகவலை யாரும் ஏற்கவேண்டாம். வாடிக்கையாளர்கள் பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றினால் நீங்கள் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தக் கூடிய வயது நிரம்பாதவராக கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கு முடங்கிவிடும். அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் இதனை ஏற்க வேண்டாம்”  என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.


ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அவர்களின் தீமை மாற்ற இதுபோன்று முயற்சி செய்து கணக்கு முடக்கப்பட்டிருந்தால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிறந்த ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாள அட்டையை  காண்பித்து ட்விட்டர் சப்போர்ட் உதவியுடன் கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்