2017-2018 ஆம் ஆண்டுக்கான பொருளாதார கணக்கெடுப்பு குறித்த தகவல்களை பாகிஸ்தான் தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் 50 லட்சம் கழுதைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் லாகூரில் மட்டும் 41,000 கழுதைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அங்குள்ள மக்கள் கூறும் பொழுது, '30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஒரு கழுதை விற்கப்படுகிறது. ஒரு கழுதை மூலம் தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம். எனவே இது மிகுந்த லாபகரமான தொழிலாக உள்ளது' என கூறுகின்றனர். கழுதைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அதனை பராமரிப்பதற்காக இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் தனி மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கழுதைமயமாகும் பாகிஸ்தான்..!!
Advertisment