Skip to main content

கார் டயரின் நடுவில் சிக்கிய நாய்... பிறகு என்ன நடந்தது தெரியுமா..?

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

மெக்சிகோ நாட்டில் மால்டா நகரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில், பயன்படுத்திப் போட்ட கார் டயர் ஒன்று இருந்துள்ளது. அங்கு உணவைத் தேடிச் சென்ற 10 மாத பெண் நாய் ஒன்று, அந்த டயரைக் கண்டதும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தது. கார் டயரை தலையால் முட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென நாயின் தலை, அந்த டயரின் நடு துவாரத்தில் சிக்கியது. தலையை நாயால் வெளியே எடுக்க முடியாமல் திணறியது.
 

xgbஇதனால் வலி தாங்காமல் அந்தப் பெண் நாய் கத்தத் துவங்கியது. அதைக் கண்ட அங்கிருந்த மக்கள், அதனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர், இதுகுறித்து அப்பகுதி பொதுபமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், நாயின் தலை மாட்டியுள்ள கழுத்தில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லை தடவி, அதன் முகத்தை பிடித்து அங்கும், இங்கும் அசைத்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு, மெதுவாக டயரிலிருந்து நாயின் கழுத்தை வெளியே எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொலையாளியைத் தேடிச் சென்ற மோப்ப நாய். நொடிப் பொழுதில் நடந்த திடீர் திருப்பம்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
The sniffer dog that went looking for the culprit in karnataka

கர்நாடகா மாநிலம், சன்னகிரி தாலுகா, சந்தேபென்னூர் பகுதியில் உள்ள சாலையோர பெட்ரோல் பங்க் அருகே ஆண் சடலம் ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இது குறித்து உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த எஸ்.பி உமா பிரசாந்த், பிற காவல்துறையினருடன், ‘துங்கா 2’ என்ற மோப்ப நாய் மற்றும் அதை கையாளுபவர் ஆகியரோடு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு சென்ற போது, ஆண் சடலத்தின் சட்டையை மோப்பமிட்ட துங்கா 2 என்ற மோப்ப நாய், கொலையாளி இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது. துங்கா 2 மற்றும் அதைக் கையாளுபவர், சுமார் 8 கி.மீ தூரம் ஓடிய பின்பு, பெரிய சத்தம் கேட்ட ஒரு வீட்டில் நாய் நின்றது. இதன் மூலம், அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், ஒரு நபர் ஒரு பெண்ணை இரக்கமின்றி அடித்து கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பெண்ணைக் கொலை செய்ய முயன்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், போலீசார் தேடி வந்த கொலையாளி அந்த நபர் தான் என்றும் அவரது பெயர் ரங்கசாமி என்றும் தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சந்தேபென்னூரைச் சேர்ந்த சந்தோஷும், ரங்கசாமியின் மனைவியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரங்கசாமிக்கு தெரியவர, ஆத்திரமடைந்து சந்தோஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தனது மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

அதன்படி, வீட்டிற்கு வந்த ரங்கசாமி, தனது மனைவியை அடித்து கொலை செய்யும் நேரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது தெரியவந்தது. கொலையாளியைக் கண்டுபிடிக்க மழையில் 8 கி.மீ ஓடி நொடி பொழுதில் பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய துங்கா 2 என்ற மோப்ப நாயை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Next Story

தெருநாய்கள் கடித்து சிறுமி படுகாயம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tenkasi District Achanputur 12th Street dog incident
மாதிரிப்படம்

தெருநாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் 12வது தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு எட்டு வயதில் மனிஷா என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (22.06.2024) காலை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி மனிஷாவைக் கடித்துள்ளன.

இதனைக் கண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியை மீட்டுள்ளார். இருப்பினும் நாய் கடித்ததில் படுகாயமடைந்த மனிஷா தென்காசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.