உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 31,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584956668553-0'); });
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584957472633-0'); });
உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பல பகுதிகளில் கருத்தடை சாதனங்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இதனால் 70 லட்சம் பேர் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், குடும்ப வன்முறை நடக்கவும் வாய்ப்புள்ளதாகவும், 6 மாதங்களில் 3 கோடியே 10 லட்சம் சண்டைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தை திருமணம் செய்ய வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஐ.நா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.