Skip to main content

கரோனா வைரஸ்... 700-ஐ கடந்த பலி எண்ணிக்கை...

Published on 08/02/2020 | Edited on 09/02/2020

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 700 -ஐ கடந்துள்ளது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

corona virus fatalities

 

 

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 30,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.