Skip to main content

செல்ல பிராணிகளுக்கு மாஸ்க்... சீனர்கள் உஷார்!

Published on 31/01/2020 | Edited on 01/02/2020

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களின் வளர்ப்பு பிராணிகளை காப்பாற்ற சீன மக்கள் போராடி வருகிறார்கள். சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகமூடிகளை அனைவரும் அணிந்து வருகிறார்கள். 
 

jk



இந்நிலையில், பொதுமக்கள் தங்களின் செல்லப்பிராணிகளை வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முகமூடிகளை வாங்கி விலங்குகளுக்கு அணிவித்து வருகிறார்கள். வழக்கத்தை விட தற்போது 10 மடங்கு முகமூடிகள் விற்பனை செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதுவரை எந்த பிராணிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்