ஒரே ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்கு, ஒட்டுமொத்த நாட்டுக்கே பொதுமுடக்கம் போடப்பட்டது என்றால், ஆச்சரியம் தானே. அது வடகொரியாவில் நடந்திருக்கிறது.
வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார் வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன்.
உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த கரோனா நோய்த்தொற்று என்ன அதிசயமோ, வடகொரியாவின் மட்டும் அப்போது பரவவேயில்லை. இதனால் சீனா வழங்க முன்வந்த தடுப்பூசியைக் கூட அந்நாட்டு அதிபரான கிங் ஜாங் உன் வேறு நாட்டிற்கு வழங்குமாறு சொல்லிவிட்டார்.
ஆனால், இப்போது வடகொரியாவில் ஒருவருக்கு ஓமிக்ரான் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவருக்காக ஒட்டுமொத்த வடகொரியாவுக்கும் அந்நாட்டு அதிபர் கிங் ஜாங் உன் பொதுமுடக்கம் போட்டு, உலக நாடுகளுக்கு மீண்டும் ஆச்சரியமளித்துள்ளார்.