உலகமெங்கிலும் கரோனா மீண்டும் அச்சுறுத்தலை தொடங்கியுள்ளது. கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
கரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,உலகில் முன்னணி கால்பந்தாட்டவீரரான லயோனல் மெஸ்ஸிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி அணியைச் சேர்ந்த மெஸ்ஸி உள்ளிட்ட 4 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.