Published on 27/04/2022 | Edited on 27/04/2022
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு சென்ற நேற்று (26/04/2022) வெள்ளை மாளிகைக்கு திரும்பிய போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டார். கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தொற்று நீங்கிய பிறகு அவர் அலுவலகம் திரும்புவார் என வெள்ளை மாளிகைத் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், சில இடங்களில் ஒமிக்ரான் பிஏ2 வகை பரவல் சற்றே அதிகரித்துள்ளது.