Skip to main content

தொடர் சோகம்: துருக்கி - சிரியா எல்லையில் மீண்டும் நிலநடுக்கம்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

 Continued Tragedy; Powerful Earthquake Again on Turkey-Syria Border

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்பான காட்சிகள், செய்திகள் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில், துருக்கி - சிரியா எல்லையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. துருக்கியின் அன்டகயா என்ற இடத்தில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பயத்தில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

 

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்கனவே 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அங்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்