Skip to main content

மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது! 

Published on 15/05/2022 | Edited on 15/05/2022


தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் நடைபெற்ற நிகழ்வில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 

 

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு போப் பிரான்ஸிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 

 

இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

முன்னதாக, புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடப்பட்டதை அமைச்சர் மனோ.தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போப் ஆண்டவருடன் பலதரப்பட்ட விவகாரங்களை விவாதித்த பிரதமர் மோடி!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

NARENDRA MODI - POPE FRANCIS

 

அக்டோபர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெறும் 16வது ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி நாட்டிற்குச் சென்றுள்ளார். அவரோடு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரும் சென்றுள்ளனர்.

 

இந்தநிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று வாடிகன் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று (30.10.2021) போப் ஆண்டவரைச் சந்தித்து உரையாடினார். போப் ஆண்டவரைச் சந்திக்கும் ஐந்தாவது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

போப் ஆண்டவரைச் சந்தித்த பிரதமர் மோடி, "போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பை மேற்கொண்டேன். அவருடன் பலதரப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்துள்ளார். மேலும், போப் பிரான்சிஸை இந்தியா வருமாறு அழைத்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

 

Next Story

கேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டத்தை வழங்குகிறார் போப் பிரான்சிஸ்!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

வாடிகனில் இன்று (13/10/2019) நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியாவுக்கு புனித பட்டம் வழங்குகிறார். 
 

கேரள மாநிலம் திருச்சூரில் 1876 ஆம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. கன்னியாஸ்திரியான, இவர் 1914- ஆம் ஆண்டு புனித குடும்பத்தின் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார் இதன் மூலம் ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வந்தார். தொடர்ந்து சமூகப்பணியாற்றி வந்த மரியம் திரேசியா, கடந்த 1926- ஆம் ஆண்டு மரணமடைந்தார். 
 

VATICAN CITY POP FRANCIS KERALA WOMEN THERESIYA


கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய போப் 2ம் ஜான்பால் முக்திப் பேறு அடைந்தவர் என்ற பட்டத்தை மரியாவுக்கு வழங்கினார். அதை தொடர்ந்து இன்று வாடிகனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மரியம் திரேசியாவை புனிதராக போப் பிரான்சிஸ் அறிவிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தலைமையிலான குழு வாடிகன் சென்றுள்ளது.