Skip to main content

குவிந்த காக்கைகள்; கரையொதுங்கிய ராட்சத உலோக உருண்டை; உறைய வைத்த உளவு பயம்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

nn

 

ஜப்பானின் என்ஷு கடற்கரையில் ராட்சத உலோக உருண்டை ஒன்று கரை ஒதுங்கியது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஜப்பானின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஹமாமட்சுவில் உள்ள என்ஷு கடற்கரையில் ராட்சத அளவிலான ஒரு மர்ம உலோக உருண்டை ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அது வெடிக்கக் கூடிய பொருள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

 

சீனா, வடகொரியாவின் உளவு நடவடிக்கை காரணமாக இந்த உலோக உருண்டை அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து எந்த அறிகுறிகளும் அதில் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மர்ம உருண்டையானது உண்மையில் என்ன, எங்கிருந்து வந்தது என எந்தத் தகவலும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

 

தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கும் பொருட்களை அனுப்புவதை நிறுத்துமாறு உளவு பயம் காரணமாக ஜப்பான் சீனாவை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அண்மையில் ஜப்பானின் கியோட்டோவிற்கு அருகில் உள்ள தீவான ஹோன்ஷுவில் ஆயிரக்கணக்கான காகங்கள் ஒரே இடத்தில் குவியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது  குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.