Published on 09/06/2020 | Edited on 09/06/2020

கடந்த சில வாரங்களாக இந்தியா-சீனா எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவத்தை குவிந்ததால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து பதற்றத்தை தணிக்கும் பொருட்டு இருநாட்டு அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை அடுத்து தற்பொழுது லடாக், கல்வான் பகுதியில் இருந்து தற்போது சீன ராணுவம் பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் பின்வாங்கியது சீன ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.