Skip to main content

கொரோனா பாதிப்புக்கு நடுவே சீனாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... மரணத்தருவாயில் மனைவியை சந்தித்த 85 வயது முதியவர்...!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், 23 நாடுகளில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 425 பேர் உயிர் இழந்துள்ள நிலையில், உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. சீனாவில் தற்போது பதற்றமான சூழல் நிழவி வரும் நிலையில், சீனா மருத்துவமனையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

China Emotional incident

 



தென்மேற்கு சீனாவின் செங்கடூவில் நகரில் ஜாங்(85) மற்றும் அவரது மனைவி வென்(87) ஆகிய இருவரும் உடல் நலககுறைவு காரணமாக ஒரே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வென் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், மற்றோரு அறையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த கணவர் ஜாங், கடைசியாக தனது மனைவியைப் பார்த்துக் கொள்கிறேன் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்து. இதையடுத்து மனைவி சிகிச்சை பெற்று வந்த அறைக்கு சென்ற ஜாங், கண்ணீர் மல்க மனைவியிடம் உரையாடினார். தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டிருந்ததால் மனைவி வென்னால் பேச முடியவில்லை. இருப்பினும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை மருத்துவமனையில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த உணர்ச்சி போராட்டத்தை சமூகவலைதளத்தில் உலகமெங்கும் பல மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்