சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 80 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தற்போதைய நிலவரப்படி சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,012 லிருந்து 3.042 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 80,409 லிருந்து 80,552 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அமெரிக்க நாட்டில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 லிருந்து 12 ஆக உயர்ந்துள்ளது.