மெக்கின்சி & கோ வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையன்படி, சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பணக்கார நாடாக மாறியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2000ஆம் ஆண்டில் வெறும் 7 டிரில்லியன் டாலராக இருந்த சீனாவின் நிகர மதிப்பு 2020இல் 120 ட்ரில்லியன் டாலர்களாக மாறியுள்ளது.
அதேசமயம், 2020இல் அமெரிக்காவின் நிகர மதிப்பு 90 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. இது 2000ஆம் ஆண்டில் இருந்ததைவிட இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும் 2000இல் இருந்து 2020 வரை உலகளாவிய நிகர மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
2000இல் 156 ட்ரில்லியன் டாலராக இருந்த உலகளாவிய நிகர மதிப்பு 2020இல் 514 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ள அந்த அறிக்கை, இதில் மூன்றில் ஒரு பங்கு உயர்வுக்கு சீனா காரணமாக இருந்துள்ளது எனவும் கூறியுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவின் செல்வங்களில் மூன்றில் இரண்டு பங்கு, வெறும் 10 சதவீத குடும்பத்தினரிடமே உள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.