உலகையேஅச்சுறுத்திவரும் கரோனாதொற்றுக்குஎதிராக,தடுப்பூசிகள் பயன்பாட்டிற்குவரத்தொடங்கிவிட்டன. இங்கிலாந்து,அமெரிக்கா ஆகிய நாடுகள் 'பைசர்' தடுப்பூசிக்கு அனுமதிவழங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. மேலும், ரஷ்யாவில் 'ஸ்புட்னிக் 5' என்ற தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது.
பல்வேறு நாடுகள் 'பைசர்' தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. மேலும், அமெரிக்கா'மாடர்னா' தடுப்பூசிக்கும், இங்கிலாந்து 'அஸ்ட்ராஜெனெகா' தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தநிலையில், கரோனாமுதன்முதலில் பரவியநாடான சீனாவில், 'சினோபார்ம்' என்ற தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசி79.3 சதவீதம்செயல்திறன் கொண்டது எனசினோபார்ம் தடுப்பூசி நிறுவனம்அறிவித்துள்ளது.