Skip to main content

ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்; எலான் மஸ்க் திட்டம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Charges to use Twitter.. Elon Musk

 

ட்விட்டர் தளம் என்பது உலகில் அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய சமூக வலைத்தளமாக இருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்த எவ்வித கட்டணமும் நாம் செலுத்த வேண்டியதில்லை. ஒருவேளை, நமது ட்விட்டர் கணக்கைத் தனித்துவமாக மற்றும் அதிகாரப்பூர்வ கணக்காகக் காட்ட விரும்பினால் ப்ளூ டிக் எனப்படும் வசதியைப் பணம் கட்டிப் பெறலாம். மேலும், நாட்டின் பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களுக்கு கிரே கலர் டிக்கும் வழங்கப்படுகிறது. இந்த செயலியில், சிலர் தானாகவே ட்வீட் செய்யும் 'பாட்'க்கள் பலவற்றை உருவாக்கி வந்தனர். இதனால் சில தவறான தகவல்கள் அதிகமாக மக்களிடம் சேர்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்த நிலையில் தான், ட்விட்டர் செயலியின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விவாத நிகழ்வில் கலந்துகொண்டார். அதில், பெஞ்சமின் அவர்கள் மஸ்க்கிடம், ஆன்லைனில் பாட்கள் மூலம் பகிரப்படும் யூத எதிர்ப்பை ட்விட்டர் எவ்வாறு தடுக்கப் போகிறது எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மஸ்க், "ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு சிறிய மாதாந்திர கட்டணத்தை நிர்ணயிப்பது தீர்வாக இருக்கலாம். மேலும், பாட்களின் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு ஒரே வழி இதுதான் என நினைக்கிறேன். ஏனென்றால், பாட்களின் விலை தற்போது சில பைசாக்களில் கிடைக்கிறது. ஒருவேளை அது சில டாலர்களாக உயர்ந்தால் பயன்பாடுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து, நீங்கள் ஒவ்வொரு புதிய பாட்களுக்கும் தனித்தனி கட்டணங்களை செலுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

 

மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் பிரதானமாக செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசியுள்ளனர்.

 

அனைத்து ட்விட்டர் பயனர்களும் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் உருவானால், ஏராளமான போலி கணக்குகள் முடக்கப்படும். அதேவேளையில், ட்விட்டர் நிறைய பயனர்களையும் இழக்க நேரிடும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை பயனர்களிடம் சிறியளவில் மாதக் கட்டணம் பெற்றால் ட்விட்டரின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ட்விட்டர் பல முக்கிய அம்சங்களை கொண்டு வருகின்ற தருணத்தில் இந்த முடிவு தேவைதானா என்ற கேள்விகளும் எழுகின்றன.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

காசா மருத்துவமனைகளுக்கு எலான் மஸ்க் நன்கொடை

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Elon Musk donates to Gaza hospitals

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.

 

இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனிடையே, காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது. மேலும், இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவத்தால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவரும், உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

திரைப்படமாகும் ‘எலான் மஸ்க்’ வாழ்க்கை வரலாறு

 

elon musk biopic updates

 

உலகின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் இப்போது முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க், சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் பக்கத்தின் சிஇஒ-வாக இருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு ‘எலான் மஸ்க்' என்ற அவரது பெயரில் கடந்த செப்டம்பரில் புத்தகமாக வெளியானது. இதை பிரபல எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் எழுதியிருந்தார். இவர் ஏற்கனவே ஆப்பிள் சிஇஒ-வாக இருந்து மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை புத்தமாக எழுதியிருந்தார். இதை மையமாக வைத்து 2015ல் ஸ்டீவ் ஜாப்ஸின் பயோகிராபி வெளியானது. 

 

இந்த நிலையில் ‘எலான் மஸ்க்’ வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. வால்டர் ஐசக்சன் எழுதிய புத்தகத்தை வைத்து உருவாகும் இப்படத்தை ஏ24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 'பிளாக் ஸ்வான்' (Black Swan), 'தி வேள்’ (The Whale) உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் தி வேள் படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னணி பிரபலங்களுடன் எலான் மஸ்கின் பயோ-பிக் உருவாகவுள்ளதாகத் தெரியும் சூழலில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.