Skip to main content

இந்த நாடு கூட நாளை மூன்றாம் உலகப்போரை துவக்கலாம்! டிரம்பின் கருத்துக்கு கண்டனங்கள்!!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

trump

 

 

 

நேட்டோ உறுப்பினராக உள்ள ஒரு குட்டி  நாடு கூட மூன்றாம் உலகப்போர் உருவாக காரணமாக இருக்கலாம் என்று  கருத்து கூறிய டிரம்பிற்கு கண்டங்கள் வலுத்துவருகிறது.

 

அண்மையில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபரிடம் நேட்டோ உறுப்பினர்களாக உள்ள எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது நேட்டோவில் உறுப்பினராக உள்ள மற்ற அனைத்து நாடுகளையும் தாக்கியதற்கு சமம் அப்படியிருக்க வெறும் 6 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குட்டி நாடான மாண்டிநெக்ரோவை காப்பாற்ற அமெரிக்கா சொல்லவேண்டுமா என்ற கேள்வி கேட்க்கப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த டிரம்ப் மாண்டிநெக்ரோ 6 லட்சம் பேரை கொண்ட சிறிய நாடுதான். அங்குள்ள ராணுவ வீரர்கள் வெறும் 2 ஆயிரம்தான் ஆனால் அவர்கள் ஆக்ரோசமானவர்கள். குறைவான வீரர்களை கொண்ட குட்டி நாடாக இருக்கும் மாண்டிநெக்ரோ கூட நாளை மூன்றாம் உலகப்போரை துவங்கிவைக்கும் நாடாக இருக்கலாம் என்ற கருத்துக்கு தற்பொழுது கண்டனங்கள் வலுத்துவருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சையில் சிக்கிய ஆ. ராசா; பா.ஜ.க கடும் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
BJP strongly condemned on A. Rasa, caught in controversy again

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியா ஒரு துணைக் கண்டம். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆ. ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“பெரிய கட்சியான பா.ஜ.க வாக்குகளைத் திருடிவிட்டது” - அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Arvind Kejriwal condemns chandigarh mayor election

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்தும், சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை கண்டித்தும் டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் பலரை போலீஸ் வீட்டுக் காவலில் வைத்தது. 

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சண்டிகர் மேயர் தேர்தலை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது. இந்த தேர்தல் மிகச்சிறிய தேர்தல் தான். ஆனால், உலகின் பெரிய கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க, வாக்குகளை திருடி வசமாகப் பிடிபட்டது.  சண்டிகர் போன்ற சிறிய தேர்தலில் அவர்களால் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்றால், சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் எவ்வளவு பெரிய குழப்பத்தை உருவாக்குவார்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. 

தேர்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அரசியல் கட்சிகள் வரும், போகும். தலைவர்கள் வருவார்கள், போவார்கள், இன்றைக்கு பா.ஜ.க ஆண்டுகொண்டு இருக்கிறது. நாளை வேறு யாராவது ஆட்சி செய்யலாம். ஆனால், ஜனநாயகத்தில் யாரும் விளையாடக்கூடாது. தேர்தலில் விளையாடுபவர்கள் ஜனநாயகத்திலும் விளையாடுவார்கள். பா.ஜ.க.வின் நடவடிக்கைக்கு எதிராக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். இந்த மோசமான சூழ்நிலையில் ஜனநாயகத்தை அழியவிடக்கூடாது” என்று பேசினார்.