கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் இந்த ஆண்டு தொடக்கம் என அடுத்தடுத்து போயிங் நிறுவனத்தின் இரு விமானங்கள் பயணிகளுடன் விபத்துக்குள்ளானது.

Advertisment

Boeing announces $100 million fund for families of 737 Max crash

கடந்த ஆண்டு இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பயணிகள் உயிரிழந்தனர். அதே போல கடந்த மார்ச் மாதம் எத்தியோப்பியா நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துகளில் சேர்த்து மொத்தம் 338 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துகளுக்கு பின்னர் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க உலக நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 100 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 684 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்குவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த இழப்பீடை ஏற்க மறுத்துள்ளனர்.