அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி தொடர்பான முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அவ்வப்போது வானில் நடக்கும் அற்புத நிகழ்வுகளையும் படம் பிடித்து வெளியிட்டுவருகிறது.
அந்தவரிசையில் தற்போது இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் நிகழ்வைப் படம்பிடித்து, நாசாவின் சந்திரா எக்ஸ் - ரே கண்காணிப்பகம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா, 'என்.ஜி.சி 6240' என்ற பால்வெளியில், இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு கருந்துளைகளும் 3,000 ஒளியாண்டு இடைவெளியில் இருக்கின்றன. இவையிரண்டும் ஒன்றாக இணைந்து, ஒரு மிகப்பெரிய கருந்துளையை உருவாக்கப் போகின்றன. அது இன்றிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு, மிகப்பெரிய கருந்துளையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
நாசா வெளியிட்ட இந்தப் புகைப்படத்தை மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வியந்து வருகின்றனர். மேலும், இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.