Skip to main content

பாஜக மூத்த தலைவரின் காணாமல் போன மகன் பிணமாக கண்டெடுப்பு...

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

தெலங்கானா மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதய் பிரதீப்பின் மகன் கடந்த மாதம் லண்டனில் காணாமல்போன நிலையில் தற்போது அவரின் உடல் பிரிட்டன் கடற்கரை பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

 

bjp leader son found in britain beach

 

 

தெலங்கானா மாநிலம் கம்மன் மாவட்ட பாஜகவின் தலைவர் உதய் பிரதீப். இவரது மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா (23) இங்கிலாந்தில், எம்.எஸ். படித்து வந்தார். தினசரி பெற்றோருடன் தொலைபேசியில் பேசும் உஜ்வால், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் யாரையுமே தொடர்பு கொள்ளவில்லை. இதனையடுத்து தனது மகனை காணவில்லை என உதய் பிரதீப், லண்டன் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனை அடிப்படையாக கொண்டு லண்டன் போலீசார் நடத்திய விசாரணையில் உஜ்வாலின் பை மட்டும் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், மாயமான உஜ்வால் ஸ்ரீஹர்ஷாவின் உடல் பிரிட்டனில் உலா ஒரு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீஹர்ஷாவின் குடும்பத்தினர் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்தனர். இவரது மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்