மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து பில்கேட்ஸ் (65) விலகியுள்ளது உலக அளவில் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச்சேவைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதால், இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். பதவி விலகினாலும் மைக்ரோசாப்ட் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். உலகளாவிய சுகாதாரம் மற்றும் மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாரன் பூஃபட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்தும் பில்கேட்ஸ் விலகியது குறிப்பிடத்தக்கது.