Published on 04/12/2024 | Edited on 04/12/2024
கண்களில் ரத்தம் வடிய வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வைரஸ் தொற்று ஒன்று ஆப்ரிக்க நாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
'மார்பர்க்' வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதுவரை 15 பேர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'மார்பர்க்' வைரஸின் அறிகுறிகளாக கண்கள், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் இருந்து ரத்தம் வடியும் என தெரிய வந்துள்ளது. தீவிரமான காய்ச்சல், தலைவலி, எலும்பு மூட்டுகளில் வலி ஆகியவை இந்த வைரஸ் தொற்றுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தம் மற்றும் உமிழ்நீர் ஆகியவை மூலம் இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதாக தெரியவந்துள்ளது.