Baba Vanga predicts Global disaster will occur after June 7

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் மூதாட்டி பாபா வங்கா. இவருக்கு 12 வயது இருக்கும்போது பல்கேரியாவில் பெரும் புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்குப் பார்வை பறிபோனது. அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக அவர் கூறியிருக்கிறார். மேலும், எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதனை, கடவுள் தனக்கு கொடுத்த சக்தியாக கருதியிருக்கிறார். பாபா வங்கா, கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். ஆனாலும் இவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி கணித்து எழுதி வைத்திருக்கும் இவர், வருகிற 5079ம் ஆண்டு உலகம் அழியும் எனவும், அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இவர், இதுவரை நடந்த உலகின் பல முக்கிய நிகழ்வுகளை மிகத் துல்லியமாக கணித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் கடந்த 2001 ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி, அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்திருக்கிறார். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்களை இவர் துல்லியமாக கணித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இவ்வாறு ஏராளமான சம்பவங்களை கணித்திருக்கும் பாபா வங்கா, 2025லும் அவர் கணித்திருந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ல் நடந்த 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நடந்தேறியது. மேலும், பொருளாதார வீழ்ச்சி, மூன்றாம் உலகப்போர் என என இந்த ஆண்டில் அடுத்தடுத்த சம்பங்கள் அரங்கேறும் என்று கணித்துள்ள பாபா வங்கா, ஜூன் 7ஆம் தேதி(நாளை)க்கு பின்னர் உலகளாவிய அழிவுகள் ஏற்படும் என்று கணித்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.