/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2018-in.jpg)
2019 ஆண்டின் தொடக்கம் வெகு சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் என 2019 ஆம் ஆண்டு சிறப்பாக வரவேற்கப்பட்டது. இதுபோல ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒரு புத்தாண்டு நிகழ்ச்சிதான் தற்பொழுது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் அங்கு நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் நடைபெற்ற மிகப்பெரிய தவறுதான். அங்கு நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் ’புத்தாண்டு 2019’ என்பதற்கு பதிலாக ’புத்தாண்டு 2018’ என்று திரையிடப்பட்டது. தொடர்ந்து சில நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்ச்சியில் இறுதிவரை இது மாற்றப்படாமல் 2018 என்றே திரையிடப்பட்டது. இந்த வாணவேடிக்கை வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)