
2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் அமெரிக்காவில் 3 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக 1.5 கோடி பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.
இதற்கிடையே இந்தியாவில் தினசரி பாதிப்பு 2.5 லட்சத்தைக்கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக உலக அளவிலானதினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், கரோனா வேகமாக பரவி வருவதால், அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)