விளாடிமிர் புதின் இன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா வரும் புதின் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் இரு நாட்டுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்த பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் போட இருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா அவர்களிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை செலுத்தப்படும் என்று எச்சரித்தது.
ரஷ்யா,ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து வெறொரு நாடு இராணுவ பாதுகாப்பு பொருட்களை வாங்கினால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடையை விதிக்கின்றது அமெரிக்கா.
இந்நிலையில் இதை மீறி இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணைகளை வாங்குவதாக உள்ளது. அமெரிக்காவிடம் பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றது. இதையடுத்து மீண்டும் நேற்று அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது. ”இந்தியாவுக்கு பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்றும், இந்தியா ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிடுவதுதான் நல்லது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.