அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பால் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.
இந்த வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு என்றால், அது அமெரிக்கா தான்.அமெரிக்காவில் இதுவரை நான்கு லட்சத்திற்கு அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில்,அந்நாட்டில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000 ஐ நெருங்கி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பின் காரணமாக 2000 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.