பார்ப்பதற்கு அழகாக, பலரைக் கவரும் விதமாக இருந்த விமானநிலைய ஊழியர் அதிகம்பேரின் கவனத்தைப் பெற்றிருந்தாலும், விமானநிலையநிர்வாகம் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவில் உள்ளது ஜியாமென் விமானநிலையம். இங்குள்ள ரன்வேயில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஊழியரின் அழகில் மயங்கிய பெண் ஒருவர், அவரை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வைரலாக்கிவிட்டார். பத்து லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவைப் பார்த்து, பகிர்ந்து, புகழ்ந்துள்ளனர். சிலர் ‘தென்கொரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் சாங் ஜூங் கீ போலவே இவர் இருக்கிறார்’ என்று பதிவிட்டிருந்தனர்.

ஆனால், விமானநிலைய அதிகாரி அந்த வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். வேலை சமயத்தில் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு ஸ்டைலாக இருந்தது, முறையான சீருடை அணியாதது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது வருமானத்தில் 10 சதவீதத்தைக் குறைத்துள்ளது விமானநிலைய நிர்வாகம்.

Advertisment

‘என்மேல் தவறிருப்பது உண்மைதான். அதை நான் களைந்துகொள்கிறேன். என் வீடியோவை வெளியிட்ட பெண்ணை யாரும் திட்டவேண்டாம். அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பதை உணர்கிறேன். வெகுவிரைவாக நான் பிரபலமாகிவிட்டதற்கு அவருக்குத்தான்நான்நன்றி கூறவேண்டும்’ என அந்த நபர் தெரிவித்துள்ளார்.