Published on 13/08/2022 | Edited on 13/08/2022

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவைப் பாராட்டி இத்தாலி பெண் வீடியோவை அனுப்பியுள்ளார்.
விண்வெளி ஆய்வில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதாக, வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரிட்டி தெரிவித்துள்ளார். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும், இந்தியாவின் ககன்யான் திட்டம் வெற்றியடையவும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவுடன் தொடர்ந்து பணியாற்றுவதில் நாசா உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள், பெருமைக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.