Skip to main content

மிகவும் மாசடைந்த 50 நகரங்கள் பட்டியல்; அதிக இடங்களைப் பிடித்த இந்தியா

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

50 most polluted cities; 39 cities in India

 

உலக அளவில் மிகவும் மாசடைந்த நகரங்கள் என பட்டியல் எடுக்கப்பட்டு 50 நகரங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அந்த 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஸ்விட்சர்லாந்தின் IQAIR என்ற நிறுவனம் உலகில் மிகவும் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து ‘உலக காற்று தர அறிக்கை’ என வெளியிட்டுள்ளது. உலக அளவில் 131 நாடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடம் இருந்து பெற்ற தரவுகள் அடிப்படையில் 50 நகரங்களைக் கொண்ட பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு எட்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் 10 நகரங்களில் 6 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹுடான் நகரம் இடம் பெற்றுள்ளது. மூன்றாவதாக ராஜஸ்தானின் விவாடி, டெல்லி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திறன் மிக்க வாக்காளராகுங்கள்” - கையேடு வெளியீடு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Become an Effective Voter  Handbook Release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான சத்யபிரதா சாகு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “திறன் மிக்க வாக்காளராகுங்கள்” என்ற வாக்காளர் கையேட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25.03.2024) வெளியிட்டார்.

இந்த கையேட்டில், “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.