Skip to main content
Breaking News
Breaking

ஆற்றில் செல்லும்போது தீ பிடித்த படகு: 38 பலி 100 காயம்  - வங்கதேசத்தில் சோகம்!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

ferry

 

வங்கதேசத்தில் உள்ள ஜலோகாதி அருகே ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகில் தீப்பிடித்ததில் 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 37 பேரில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சிலர் தீயில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 

100க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காணவில்லை. இதனால் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ள நிலையில், தீ விபத்தில் சிக்கி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், தீ விபத்து ஏற்பட்டபோது பலர் தூங்கிக்கொண்டிருந்ததால், அவர்களால் அறையை விட்டு வெளியே வரமுடியவில்லை.

 

படகின் என்ஜின் ரூமில் இருந்து தீ பரவியதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக  விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் 310 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய படகில், 500 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்