மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இரண்டு நபருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்கு பிறகு மைக்ரோ ஆர்.என்.ஏ என்ற செல்லின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மைக்ரோ ஆர்.என்.ஏ என்ற செல், மனித உடல் வளர்ச்சியில் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும், மனிதனின் இயல்புகளில் அது ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும், அதன் தன்மை என்ன என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அதனை முதன் முதலாக கண்டறிந்து கூறியதற்காக இரண்டு நபர்களுக்கும் தற்போது மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், விக்டர் அம்ப்ரோஸ் உலகளவில் புகழ் பெற்ற பயோலஜிஸ்டாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு நபரான கேரி ருவ்குன், அமெரிக்காவில் மைக்ரோ பயோலஜிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், ஜெனிட்டிக் ரீதியிலான முக்கியமான துறைகளுக்கு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகப்பெரிய நோயான, கேன்சர் போன்ற நோய் ஏன் ஏற்படுகிறது? அதனை சீர்செய்வதற்கான வழிமுறைகள் என்ன? போன்றவற்றை உயிரியல் ரீதியாக அவர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு கூறியதற்காக, அவர்கள் இருவருக்கும் இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.