Skip to main content

ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்; இளைஞரால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

Youth threatens college student with personal photos

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் தமீம் கான்(24). இவருக்கும் சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே சமூக வலைதளம் மூலம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கல் இருவருக்குள் நெருக்கத்தை அதிகரித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி போன் கால் மற்றும் வீடியோ கால் பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த நில நாட்களுக்கு முன்பு மாணவி, தமீம் கானுடன் வீடியோ கால் பேசியுள்ளார். அப்போது தமீம் கான் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீடியோ காலில் ஆடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். தொடர் வற்புறுத்தலின் காரணமாக மாணவியும் ஆடைகளை அகற்றி அரை நிர்வாணமாக உடலை காட்டியுள்ளார். இதனை தமீம் கான் தனது போனில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறார். இதையடுத்து மாணவியை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த தமீம் கான் தனது போனில் எடுத்து வைத்திருந்த ஸ்க்ரீன் ஷாட் புடைப்படங்களை மாணவிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இந்த புகைப்படத்தை எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று அநாகரிகமாக பேசியிருக்கிறார்.

ஸ்க்ரீன் ஷாட் படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, ‘எனது பெற்றோருக்கு தெரிந்தால் தற்கொலையே செய்துகொள்வார்கள்; என்னை விட்டுவிடு..’ என்று கெஞ்சியுள்ளார். ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாத தமீம் கான் தனது காரியத்திலேயே கண்ணாக இருந்துள்ளார். விடாது தொந்தரவும் கொடுத்திருக்கிறார்.  அதன் காரணமாக அவருடன் பேசுவதையே மாணவி முற்றிலுமாக தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தமீம் கான் மாணவியை பழி வாங்குவதற்காக  ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த தமீம் கானின் நண்பர்கள் மாணவியை தொடர்பு கொண்டு தங்களுடனும் தனிமையில் இருக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால்  கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார். அதன் பிறகு பெற்றோரின் துணையோடு மாணவி எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார் தமீம் கானை கைது செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் தமீம் கான் மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டது  உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தமீம் கான் இதுபோன்று பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி அத்துமீறி நடந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்